கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கி பாளையம் பக்கம் உள்ள ஆச்சி பட்டி, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோகுல் பிரசாத் ( வயது 23) இவர் அங்குள்ள ஒரு தோட்டத்துக்கு கிணற்றுக்கு தனது நண்பர் கபிலனுடன் குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரின் மூழ்கி இறந்தார் . இது குறித்து அவரது தந்தை ராமகிருஷ்ணன் வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாப பலி..
