கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது .இந்த பள்ளியில் இரவு காவலாளியாக வேலை பார்த்த வருபவர் சோமு. இவர் பள்ளி வளாகத்தில் இரவில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பள்ளியின் சுற்றுச் சுவர் அருகே சுமார் 35 வயது மதிக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார் . இது குறித்து பள்ளி , சரவணம்பட்டி போலீசுக்கும் தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்கள் . விசாரணையில் பள்ளிக்கூடம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாத பவுண்டரி நிறுவனம் உள்ளது. அங்கு இருக்கும் பொருட்களை திருடுவதற்காக வந்த மர்ம ஆசாமி அங்குள்ள மரத்தின் மீது ஏறும்போது தவறி பள்ளி வளாகத்தில் விழுந்து இறந்தாரா ?என்பது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . பள்ளி வளாகத்தில் கொள்ளையன் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
பள்ளிக்கூட வளாகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த திருடன் – போலீசார் விசாரணை..!
