டிப்பர் லாரி மோதி கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவி பரிதாப பலி – 15 அடி தூரம் இழுத்துச் சென்ற சோகம்..

கோவை: சேலம் மாவட்டம் , தம்பம் பட்டி உடையார்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 31) இவரது மனைவி மோகனா (வயது 29 )இவர்கள் இருவரும் நேற்று குனியமுத்தூர் ரோடு கோவை புதூர் பிரிவில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்களது ஸ்கூட்டர் மீது மோதியது.மோதிய வேகத்தில் ஸ்கூட்டருடன் இவர்களை 15 அடி தூரம் இழுத்துச் சென்றது .இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மனைவி மோகனா இறந்தார். கணவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய் போலீசில் மனோஜ் குமார் புகார் செய்தார் .போலீசார் மாதம்பட்டி .குப்பனூர் அண்ணா நகரை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் பாலமுரளி கிருஷ்ணா ( வயது 36) என்பவரை கைது செய்தனர் மேலும் விசாரணை நடந்து வருகிறது.