கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 30) கட்டிடத் தொழிலாளி .இவர் கடந்த 23ஆம் தேதி நண்பர்கள் 3 பேருடன் மது குடிக்க சென்றார். அப்போது மற்றொரு நண்பரை லோகநாதன் தரக்குறைவாக பேசினாராம். .இதனால் ஏற்பட்ட தகராறு அந்த நண்பரை லோகநாதன் தாக்கியுள்ளார். இதனால் அவர்கள் லோகநாதன் மீது ஆத்திரமடைந்தனர். இந்த நிலையில் லோகநாதனை மறுநாள் மீண்டும் அதே நண்பர்கள் மது குடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். போதை தலைக்கு ஏறியதும் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் லோகநாதன் இறந்துவிட்டார். இதனால் தாங்கள் மாட்டி கொள்வோமோ? என்று கருதிய நண்பர்கள் 3 பேரும் லோகநாதனின் பிணத்தை ஒரு சாக்கு முட்டையில் கட்டி பவானி ஆற்றில் வீசினார்கள்..உடல் கரையோரம் ஒதுங்கியது. அப்போது துர்நாற்றம் வீசியதால் அங்குள்ள மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு ஆணின் பிணம் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது .மேலும் அடையாளங்களை வைத்து பார்த்த போது இறந்தவர் லோகநாதன் என்றும் சிறுமுகை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கொலையாளிகளைப் பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை இன்ஸ்பெக்டர்கள்,சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 3 தனிப்படைஅமைக்ப்பட்டது .தீவிரமாக விசாரணை செய்து லோகநாதனனைகொலை செய்த நண்பர்கள் 3 பேரை நேற்று பிடித்தனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
தொழிலாளியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் பிணம் வீச்சு – நண்பர்கள் 3 பேர் சிக்கினர்..!
