கோவை பீளமேடுஹட்கோ காலனி 4-வது வீதியில் 21 மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அந்த இளம் பெண்ணின் முதுகில் கைகளால் தட்டி விட்டு சென்றார் .இது குறித்து அந்த இளம் பெண் தனது அண்ணனுக்கு போன் செய்தார். பீளமேடு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் நஸ்ரின் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஆசாமியை கைது செய்தார். விசாரணையில் அவர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூசாரி பாளையத்தில் வசித்து வரும் சரத்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது .இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணின் முதுகை தட்டிய வாலிபர் கைது..!
