இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபர் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ. கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் பின்புறம் மேற்கூரை இல்லாத பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அதை யாரோ ஒருவர் எட்டி பார்த்ததாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சல் போட்டார். உடனே அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தவர் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் ( வயது 28 )என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..