கோவை சவுரிபாளையம், ஜ.வி. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரா (வயது 58) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று புலியகுளம் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் முன் தனது காரை நிறுத்தி விட்டு அங்குள்ள ஒட்டலுக்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்த போது காரை காணவில்லை. காருக்குள் லேப்டாப்பும் இருந்தது. காருடன் லேப்டாப்பை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து நரேந்திரா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..
கோவை வணிக வளாகம் முன் நிறுத்தி வைத்திருந்த கார் திருட்டு..!
