தோட்டம் புகுந்து தேங்காய் திருட்டு – 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள தேவனூர் புதூரை சேர்ந்தவர் ராஜிவ் ஆனந்த் (வயது 40) விவசாயி. கடந்த 25 ஆம் தேதி இவரது தோட்டத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து 200 தேங்காய்களை திருடி சென்று விட்டனர் . இதுகுறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து தென் சங்கம்பாளையம் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 32) அவரது தம்பி மாணிக்கம் (வயது 27) பாலன் ( வயது 29) ஆகியோரை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..