கோவை காந்திபுரம் லட்சுமண நகர் 2வது வீதியை சேர்ந்தவர் லோனன். இவரது மனைவி வின்னா ஸ்டெப் (வயது 34) இவர்களது வீட்டில் பி. என்.புதூர், லிங்கனூர் மேகலா என்ற பரிமளா ( வயது 33) இவரது அண்ணன் ஸ்ரீஹரி (வயது 36)ஆகியோர் வீட்டு வேலை செய்து வந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் அங்கிருந்த வைர மோதிரம், டாலர் பொருத்தப்பட்ட தங்க செயின் ஆகியவற்றை திருடிவிட்டனர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டு வேலை செய்து வந்த மேகலா என்ற பரிமளா (வயது 33) அவரது அண்ணன் ஸ்ரீஹரி (வயது 36) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து வைர மோதிரம்,தங்கச் செயின் மீட்கபட்டது.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர்.
வேலை செய்த வீட்டில் தங்க,வைர நகைகள் திருட்டு – அண்ணன், தங்கை கைது..!
