கோவை பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் மூகாம்பிகை நகர் சேர்ந்தவர் ஜெயக்குமாரி ( வயது 26 ) நேற்று மாலை தனது மகனை தூக்கிக் கொண்டு அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வர சென்றார். அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்து வந்த ஒரு ஆசாமி திடீரென்று ஜெயக்குமாரியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தனது கூட்டாளியுடன் பைக்கில் தப்பி சென்று விட்டான்.இதுகுறித்து ஜெயக்குமாரி பேரூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த முகமூடி கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.