கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம் நேதாஜி காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 30) இவர் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை மீட்டர் பெட்டியின் மேல் வைத்து விட்டு செல்வார் . இந்த நிலையில் கடந்த 20- ஆம் தேதி இவர் சாவியை மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது யாரோ அந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து அங்கிருந்த 2 பவுன் தங்க நகைகள், பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து மதன் குமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..