கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் வரதராஜபுரம் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் .இவரது மனைவி ராஜலட்சுமி ( வயது 70)இவர் வீட்டை பூட்டிவிட்டு அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.7 ஆயிரத்தை காணவில்லை. யாரோ இவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவில் இருந்து பணத்தை திருடி சென்று விட்டனர் .இது குறித்து ராஜலட்சுமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த அலாபின் உசேன் (வயது 33) இதிகார் (வயது 17)ஆகியோரை கைது செய்தனர் .பணம் ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது..
மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து பணம் திருட்டு – 2 பேர் கைது..!
