கோவை கே .கே .புதூர், சாய்பாபா காலனி ,பெரிய சுப்பண்ணன் வீதியைச் சேர்ந்தவர் அருண் குமார் ( வயது 47) இவர் புது சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டில் ஸ்ரீ அங்காளம்மன் டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 -ந் தேதி இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது கடையின்.சிமெண்ட் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் அதன் வழியாக உள்ளே இறங்கி மேஜை டிராயரில் இருந்த ரூ 4 லட்சத்து 18 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து அருண்குமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்..
கடையின் மேற்கூரையை உடைத்து ரூ 4 லட்சம் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை..!
