ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையில்லை… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… கோவையில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஓர்அங்கம், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது. தமிழ்நாட்டில் “ஜல்லிக்கட்டுப் போட்டிகள்” நடத்த தடை இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில்,
பெற்றுக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கும் விதமாக கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில்.கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் எம் எல் ஏ ) தலைமையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. இதில் பீளமேடு பகுதி 3 செயலாளர் சேரலாதன், வட்டக்கழக செயலாளர்கள் மா.சிவக்குமரன், கே.ஆனந்தன், க.மணிகண்டன், கோவை மாவட்ட கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சு. தனபால், மனோகரன்,மில் தண்டபாணி, கே.சின்னச்சாமி,ராமதாஸ்,நீலி சின்னச்சாமி,ரங்கநாதன், எஸ்டேட் ச.கருப்புசாமி, சண்முகானந்த சேதுபதி, கோபால், இருதயராஜ், நாகராஜ், முருகன், மனோகரன் ராமமூர்த்தி, இரா.திலக்பாபு, சால்ட் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்..