கேப்டன் விஜயகாந்த். அவரின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உள்ளதாகவும், இதனால் அவருக்கு செற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகும் அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணி அளவில் அவர் உயிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியானது. அவரது மறைவு செய்தி அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை ஒரு நாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து, அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர் விஜயகாந்த். கலைஞர், எம்ஜிஆர். ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர் விஜயகாந்த் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.