சூலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருடிய திருப்பூர் கும்பல் கைது..!

கோவை சூலூர் பக்கமுள்ள நாகம்ம நாயக்கன்பாளையம் கலங்கல், அயோத்தியாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ஆளில்லாத பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தங்கராஜன் மேற்பார்வையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர் . அவர்கள் திருப்பூரை சேர்ந்த இம்ரான் (வயது 36) ஹக்கீம் (வயது 40 ) அபுதாகிர் (வயது 36) என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து திருடப்பட்ட 19 நகைகள் மீட்கப்பட்டது. மேலும் மங்கலம் பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடியதையும், சிங்காநல்லூர் பகுதியில் பூட்டிய வீட்டில் திருடியதையும் இவர்கள் ஒப்புக்கொண்டனர். இம்ரான் மீது தமிழ்நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கொள்ளை கும்பலை கண்டுபிடித்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்..