திருவள்ளூரில் 12 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்தவர் கைது!!

திருவள்ளூர் ஜெயா நகர் சேலைப் பகுதியை சேர்ந்தவன் கோவிந்தராஜனின் மகன் வெற்றி வேந்தன்.இவன் வீட்டில் புறாக்களையும் கோழிகளையும் வளர்த்து வந்துள்ளான். அந்த நேரத்தில் தெரு நாய்கள் கோழிகளையும் புறாக்களையும் கடிக்க வந்துள்ளது. இதைப் பார்த்த வெற்றி வேந்தன் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு தெரு நாய்களை ஒழித்து க்கட்ட விஷம் வைத்து கொல்வது என முடிவு செய்தான். இரவு நேரத்தில் கறி உணவில் குடி இருக்கும் வீதியில் பல இடங்களில் சயனைடு கலந்து இரவு நேரத்தில் வைத்துள்ளான்.பசியோடு இருந்த தெரு நாய்கள் கறியை பார்த்ததும் வெறித்தனமாக ஆசை ஆசையாக ஒன்று கூடி சாப்பிட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் 12 நாய்கள் பொத்து பொத்து என்று துடி துடித்து செத்தது. மறுநாள் காலை பொதுமக்கள் வருத்தத்துடன் கூடினர். திருவள்ளுவர் நகர் போலீசுக்கும் தகவல் சொல்லினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டாலி ன் சப் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கிடுக்கி பிடி விசாரணை நடத்தினர். குற்றவாளி வெற்றி வேந்தன் என்பதனை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வெற்றி வேந்தன் வீட்டில் புறாக்களையும் கோழிகளையும் வளர்த்துள்ளதாகவும் அவற்றை தெரு நாய்கள் கடித்து குதறியதால் கோபமடைந்த வெற்றிவேந்தன் நாய்களை விஷம் வைத்து கொள்ள முடிவு செய்துள்ளான். கறி உணவில் சயனைடு விஷத்தை கலந்து கொன்றுள்ளான். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து வெற்றி வேந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைத்தனர். கால்நடை மருத்துவர் உமா விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாய்களை பிரேத பரிசோதனை அனுப்பினார் . பின்பு ஊர் மக்கள் கூடி நாய்களுக்கு மலர்மாலை சூ ட்டி ஊதுவத்தி ஏற்றி சூடம் கொளுத்தி பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு மயானத்தில் அடக்கம் செய்தனர்.