இந்தக் காஷ்மீர்-பாகிஸ்தான் போர் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலானது – மோகன் பகவத் கருத்து.!

ம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ‘மோகன் பகவத்’ மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவர் தெரிவிக்கையில்,”பகல்காமில் நடந்த தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களிடம் பயங்கரவாதிகள், அவர்களின் மதத்தைப் பற்றி கேட்ட பிறகு கொன்று உள்ளனர்.

இந்துக்கள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டார்கள். இந்த போர் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலானது. எங்கள் இதயங்களில் வலி இருக்கிறது. நாங்கள் கோபமாக இருக்கிறோம்.

ஆனால் தீமையை அழிக்க, வலிமை காட்டப்பட வேண்டும். இதுபோன்ற துயரங்களைத் தடுக்கவும், தீங்கிழைக்கும் நோக்கத்தைத் தடுக்கவும் சமூகத்திற்குள் ஒற்றுமை அவசியம்.நாம் ஒற்றுமையாக இருந்தால், யாரும் நம்மை தீய நோக்கத்துடன் பார்க்கத் துணிய மாட்டார்கள்.

வெறுப்பும் விரோதமும் நமது இயல்பில் இல்லை. ஆனால், தீங்குகளை அமைதியாக சகித்துக்கொள்வதும் இல்லை. உண்மையிலேயே வன்முறையற்ற ஒருவர் வலிமையானவராகவும் இருக்க வேண்டும்.

தேவைப்படும்போது அது புலப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.இந்தக் கருத்துக்கு பல தரப்பிகளிருந்து ஆதரவு பேச்சுக்கள் வந்த படி இருக்கிறது.