பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட புனெர் மாவட்டத்த்தில் சீக்கியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்ஸ்ட் 20ஆம் தேதி மாலை ஒரு சீக்கிய பெண் கடத்தப்பட்டு வலுகட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
குருசரண் சிங் என்பவரிடன் மகள் தினா கவுர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், தன்னை துன்புறுத்திய நபரையே உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவலர்களின் கட்டாயத்தின்பேரில் திருமணமும் செய்துவைக்கப்பட்டுள்ளார். இந்த பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையை எதிர்த்து, நியாயம் கேட்டு நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சீக்கியர் ஒருவர் கூறுகையில், ”நாங்கள் இங்கு ஒடுக்கப்பட்டு தாக்கப்படுகிறோம் என்பதை பாகிஸ்தான் மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் மக்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எங்கள் மகளை திரும்ப பெறும்வரை இந்த போராட்டம் தொடரும். அவள் உள்ளூர் நிர்வாகத்தின் துணையுடன் வலுகட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார். மேலும் மதம் மாற்றப்பட்டு திருமணமும் செய்துவைக்கப்பட்டுள்ளார்.