மக்கள் குறை தீர்ப்பு முகாம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டஅமைந்துள்ள தூரி பாலம்பகுதியில் இன்று நடைபெற்றது…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டஅமைந்துள்ள தூரி பாலம்பகுதியில் இன்று சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமில் பழங்குடியினர் மற்றும் கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா அவர்களிடம்
பழங்குடியினரும் கிராம மக்களும் அவசர கால தேவைக்கான சாலை வசதி எதுவும் இல்லை என்று கூறினார்கள்சாலை வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கையில் மனு அளித்தனர் இம்மானுஉடனடியாக ஆய்வு செய்திட அதிகாரியிடம் கேட்டறிந்து உடனடியாக நேரில் ஆய்வுக்கு சென்று அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை நேரில் கேட்டறிந்து அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்த பிறகு அப்பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாத வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு உடனடியாகஏற்படுத்தி தருகிறோம் அவசர கால தேவைக்கான பாதையை அமைக்க அதிகாரியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் அப்பாவது பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தனர்பொதுமக்களின் அழைப்பை ஏற்று உடனடியாக ஆய்வுக்கு வந்தவுடன் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து இதற்கான தீர்வைஅரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்துஉடனடியாக செய்து தருகிறோம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா அவர்கள்
கூறினார் ஆய்வின் போது ரங்கராஜன் தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வராஜ்
மண்டல துணை வட்டாட்சியர் கற்பகவள்ளி வருவாய் ஆய்வாளர் திருமதி. ரேணுகா தேவி, வருவாய் ஆய்வாளர் திருமதி ஜெயவித்யா கிராம நிர்வாக அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் யாசர்ஆகியோர் உடன் இருந்தனர் நன்றி தெரிவித்து பாராட்டி வழி அனுப்பி வைத்தனர் இது போன்ற அரசு அதிகாரிகள் மக்களுடன் இணைந்து செயல்படுவதால் அரசுக்கும் நல்ல பெயரை பெற்று தர கூடும் என்று அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்கள்