கோவை சரவணம்பட்டி ,சிவ இளங்கோ நகரை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் ஜெரின் ஜோசப் ( வயது 33) இவருக்கும் ராமநாதபுரம் பெரியார் நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சுசித்ரா (வயது 29) என்பவருக்கும் 24 -8- 20 18 அன்று திருமணம் நடந்தது ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் கணவர் ஜெரின் ஜோசப், மாமியார் யசோதா ஆகியோர் சுசித்ராவுக்கு திருமணத்தின் போது அவரது பெற்றோர்கள் போட்ட 23 பவுன் நகைகளை வாங்கி வைத்து,கொண்டு மேலும் நகை பணம் வாங்கி வருமாறு கூறி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் பெரியவர்கள் சமரசம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இவர்கள் தனியாக வசித்து வந்தனர்.இந்த நிலையில் ஜெரின் ஜோசப் தினமும் குடித்துவிட்டு வந்து வரதட்சனை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்து சுசித்ரா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா விசாரணை நடத்தி கணவர் ஜெரின் ஜோசப் ( வயது 33) அவரது தாயார் யசோதா (வயது 56) ஆகியோர் மீது கொலை மிரட்டல் வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வரதட்சனை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்-கணவர் , மாமியார் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!
