கோவை ஏப் 26 கோவை கரும்புக்கடை, பள்ளி வீதியைச் சேர்ந்தவர்முகமது ரபிக் .இவரது மகன் மோகன் ஹசன் ( வயது 27 )இவர் நேற்று சுண்ணாம்புக்களவாய் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் இவரை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து பணம் ரூ 2,500 அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்கச்செயின் ஆகியவற்றைபறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து கரும்புக்கடை போலீசில் ஹசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து சுண்ணாம்பு காளவாய், காயிதே மில்லத் காலனி சேர்ந்த சாதிக் அலி ( வயது 20) குனியமுத்தூர் ராஜுநாயக்கர் தோட்டம் முகமத் சமீர் ( வயது 21) குனியமுத்தூர் பிரின்ஸ் கார்டன் முகமத் நிசாம் (வயது 21 )ஆகியோரை கைது செய்தார். இவர்களிடமிருந்து ரூ 500 பணம் ,6 கிராம் தங்க செயின், 3 கத்திகள் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கத்தியை காட்டி மிரட்டிவாலிபரிடம் நகை – பணம் பறித்த 3 பேர் கைது.
