நீலகிரி மாவட்டம் உதகையில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு உதகை புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியில் சிறிஸ்துமாஸ் விழா கோலாகலம் நடைபெற்றது, விழாவில் பள்ளி குழந்தைகள் திரளாக பங்கேற்று கிறிஸ்மஸ் சாண்டா கிளாஸ் உடையில் விழா சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர், புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியின் தாளாளர் ஃபயாசுதீன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது, அனைத்து ஏற்பாட்டையும் பள்ளியின் தலைமையாசிரியர் தனுஷ்யா அவர்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, விழா துவக்கத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன, மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இயேசு கிறிஸ்து பிறப்பை குறித்தான நாடக நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக விளக்குத்தோடு நடித்துக் காட்டினர் கிறிஸ்மஸ் நாடக நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் தனுஷ்யா ஏற்பாட்டில் நடைபெற்றது, கிறிஸ்மஸ் விழாவில் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணமாக பள்ளி ஆசிரியர் சாண்டா கிளாஸ் போன்ற வேடமிட்டு இனிப்பு வழங்கி நடனமாடி அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார், விழாவின் முக்கிய பங்காக கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணியினை ஆசிரியர் ஜார்ஜ் பினான்டஸ் நிர்வாக அதிகாரி மற்றும் பள்ளியின் மாணவ மாணவிகளை கொண்டு சிறப்பாக குடியல் அமைத்தனர், பள்ளியின் நிர்வாகம் அவர்க்கு சிறப்பான முறையில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க பட்டது, விழா நிகழ்ச்சியில் புனித தாமஸ் பள்ளியின் தாளாளர் ஃபயாசுதீன் சிறப்புரை ஆற்றியதில் நாம் இந்தியாவில் வாழ்வதால் அனைத்து மதத்தையும் ஒன்றுதான் சமத்துவமாக எல்லாரிடமும் பழக வேண்டும் இப்பள்ளியில் அனைத்து மதத்தினர் பண்டிகைகளும் அனுசரிக்கப்படும் என்றார், மற்றும் குழந்தைகளுக்கு சாண்டா கிளாஸ் எப்படி இந்த உலகிற்கு வெளிப்பட்டார் என்பதையும் எடுத்துக் கூறினார் நிக்கோலஸ் என்னும் குரு மூன்றாம் நூற்றாண்டில் சாண்டா கிளாஸ் ஆக மாறுகிறார்,ஏழை எளிய குழந்தைகளுக்கு வெள்ளை குதிரையில் வீடு வீடாக சென்று பரிசு பொருட்களை வழங்கினார் அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் இன்று வரை சாண்டா கிளாஸ் உடைய வரலாற்றில் சிறப்புமிக்க பணிகள் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையிலும் வெளிப்படையாக செயலாற்றி வருகிறார்கள், கிறிஸ்மஸ் விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனுஷா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, விழா நிறைவாக பள்ளித்தாளாளர் தலைமை ஆசிரியர் ஆகியோர் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தனர், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாண மனிதர்களுக்கு கேக் இனிப்பு வழங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது