ஆவின் பெயரில் மோசடி: கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் நோயாளிகள் அவதி…

கோவை, சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் உள்நோயாளி முதல், வெளி நோயாளிகள் வரை ஆயிரக் கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆவின் பால் நிறுவன என்ற பெயரில் டீக்கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பாலகங்களில் ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதனால் பால், தயிர், நெய், பால்கோவா, மேலும் டீ விற்பனைக்கு அனுமதி உண்டு, இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆவின் நிறுவனத்தில் ஆவின் பாலகம் அமைக்க உரிமம் பெற்று மாநகராட்சி பகுதிகளில் பாலகங்களை நடத்தி வரும் நபர்கள், ஆவின் விதிகளை மீறி மற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு
விதிமுறைகளை மீறி பல்வேறு பொருட்களை விற்பனை செய்ததால் ஆவின் பாலகத்தை மூடி சீல் வைத்துச் சென்றனர். மேலும் சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் பொது மக்களுக்கு ஆவின் பெயரில் செயல்பட்டு வரும் இந்த டீக்கடைகள் மேலும் நோய்கள் பரவும் இடமாக மாறுவதற்குள் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.