மதுரை வானில் திக்… திக்… தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த ஹைதராபாத் விமானம் – பத்திரமாக தரையிறக்கம்.!!

துரை: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது.

மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த விமானம், மதுரை விமான நிலையம் அருகே உள்ள விராதனூர் மற்றும் திருமங்கலம் பகுதியில் வானில் வட்டமடித்து வந்தது. இதனிடையே வானிலை சரியான நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டிம், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த நவம்பர் 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் – இலங்கை கடற்கரையை இது நோக்கி நகரும் என்று வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மதுரை மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வானம் கடுமையாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேகமூட்டம் என்பதை தாண்டி மதுரையில் விமானங்கள் தரையிறங்க முடியாத அளவிற்கு மோசமான வானிலை இன்று காலை நிலவியது.

இதன் காரணமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த தனியார் விமானம், மதுரை விமான நிலையம் அருகே உள்ள விராதனூர் மற்றும் திருமங்கலம் பகுதியில் வானில் வட்டமடித்து வந்தது. இதனிடையே வானிலை சரியான நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.