கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 33 )இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் காந்திபுரம், சத்தி ரோடு, அலமுநகரை சேர்ந்த விஜயகுமார் என்ற விஜய் ( வயது 32)என்பவரும் நண்பர்கள்.இந்த நிலையில் விஜயகுமார் தனது நண்பர் முகுந்தனிடம் 12 -7 -20 21 அன்று ரூ.25 லட்சம் கடன் வாங்கினார்.அதில் ரூ.19 லட்சத்து 23 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்தார்.மீதி பணத்தை கொடுக்கவில்லை.இந்த நிலையில் மேலும் ரூ.4,லட்சத்து 50 ஆயிரத்தை முகுந்தன் நண்பர்களான நாகரத்தினம், கலையரசி, ஜன்னி ஆகியோரிடம் இருந்து வாங்கினார்.இந்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.இதுகுறித்து முகுந்தன் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விஜயகுமார் என்ற விஜய்யை நேற்று கைது செய்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.