கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது தியாகி குமரன் அனைத்து காய் கனி சிறு வியாபாரிகள் பொது நல சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நழிவற்ற வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி தருமாறு மாநகராட்சியிடம் கேட்டிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் 88 பேருக்கு மட்டும் கடைகள் ஒதுக்கி தருவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. மீதமுள்ள 40 பேருக்கு எந்த வித ஏற்படும் செய்யவில்லை. எனவே மீதமுள்ள 40 பேருக்கும் கடைகளை ஒதுக்கி தர வேண்டும். இதற்கான நடவடிக்கையை கலெக்டர் மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனதில் கூறப்பட்டிருந்தது.
விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தொண்டாமுத்தூர், தடாகம் உள்பட பகுதிகளில் அதிக அளவு விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு விவசாய நிலங்களை காட்டு பன்றிகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் விவசாயிகளையும் தாக்குகிறது. இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். எனவே கேரளா அரசு விவசாய நிலங்களில் புகும் பன்றிகளை சுட்டு கொல்ல அனுமதி அளித்துள்ளது. அதேபோன்று தமிழக அரசும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கோவை திருமலை நாயக்கன்பாளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம் கூடலூர் திருமலை நாயக்கன்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த நிலையில் 22 பேர் மட்டும் ஒன்று சேர்ந்து ஊர் பொது மக்களுக்கு தெரியாமல் அன்னதான கமிட்டி எனக்கூறி நன்கொடை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்த போது அவர்கள் எங்களை தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே எங்களது உயிருக்கும், உடைக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.