தமிழகத்தில் களை கட்டும் தைப்பூசத் திருவிழா. தைப்பூசம் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா . தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம். ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.
தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல், பால் குடம், அலகு குத்துதல், சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, பால் காவடி,
மச்சக்காவடி, மயில் காவடி போன்ற காவடிகள் உடன் நடனமாடி, பக்தி பரவசத்துடனும் பாதயாத்திரை சென்று முருகனை வழிபடுவார்கள்.
இந்நிலையில் கோவையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் உத்தம பாலாஜி ராமசாமி தலைமையிலும், பேராசிரியர் கனகசபாபதி, விவசாய அணி ஜி கே நாகராஜ் மற்றும் பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கோவையை காக்க வேண்டி மருதமலை நோக்கி தைப்பூச பாதயாத்திரையை புளியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தொடங்கி மருதமலை நோக்கி நடை பயணம் தொடங்கினர்.