கிறிஸ்மஸ் பண்டிகை வரவேற்க… ஊட்டி நட்சத்திர ஓட்டலில் கேக் கலவை திருவிழா கோலாகல துவக்கம்.!!

உதகை: கிறிஸ்மஸ் பண்டிகை வருகை முன்னிட்டு அணிச்சல் என்னும் கேக் கலவை திருவிழா ஊட்டி ஜெம்பார்க் நட்சத்திர ஓட்டலில் 30வது ஆண்டு கோலகலம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுற்றுலா பயணிகளுடன் கேக் கலவை திருவிழாவில் கலந்து கொண்டனர்.
அணிச்சல் (கேக்)எனப்படுவது திருமண விழா மற்றும் பிறந்தநாள் விழா.ஆங்கில புத்தாண்டு போன்ற மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் மங்கல நாட்களில் செய்யப்படும் சிற்றுண்டி வகையினை சேர்ந்த திண்பண்டமாகும் அணிச்சல் (கேக்)நிறைய வகைகளாக காணப்படுகிறது
இது அற்புதமான கலவை திருவிழாவாகும் பிரிட்டிஷ் பாரம்பரியத்தை சேர்ந்த இந்த கொண்டாடங்களின் ஒரு பகுதி நீலகிரி மாவட்டம் பாரம்பரிய மிக்க நட்சத்திர விடுதிகளில் இது போன்ற விழாக்கள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது மகிழ்ச்சிதான்,இந்த விழாவின் வரலாறு 17ம் நூற்றாண்டிற்க்கு முற்பட்டது இது அறுவடை பருவத்ததின் வருகையை குறிக்கும் போது பல வகை பழங்கள் பருப்புகள் அறுவடை செய்யப்படும் …
அன்பாக அழைக்கப்படும் விருந்தாளிகள் செஃப் தொப்பிகளை அழகாக அணிந்து அப்பிரன்ஸ் மற்றும் கையுறைகளை அணிந்து மேசைகள் முன் அணிவகுத்து மது.பழங்கள்.உலர் பழங்கள் .பருப்புகள் என பல வண்ணங்களில் கண்ணைகவரும் வகையில் குவியல் குவியலாய் இருக்க அனைவரும் ஒன்றினைந்து இந்த கலவை திருவிழாவில் அணிச்சல்.(கேக்)தயாரிக்கும் அழகே அழகு நறுமண பொருட்களின் மனம் மனதை மயக்கும்.
இந்த அணிச்சல் (கேக்)தயாரிக்கும் கலவை திருவிழா பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட உலக புகழ்பெற்ற ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நவம்பர் மாதங்களில் வெகு கோலகலமாக நடைபெறும் இதுவே கிருஸ்துமஸ் பெருவிழாவின் தொடக்கமாகும்
அதன்படி ஊட்டியில் புகழ்பெற்ற ஜெம்பார்க் நட்சத்திர ஓட்டல் அரங்கில் கலவை திருவிழா என்னும் கேக் (மிக்சிங்)நிகழ்ச்சி வண்ணமயமாய் நடைபெற்றது
மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா இ.கா.ப. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுற்றுலா பயணிகளுடன் இணைந்து கேக் மிக்சிங் நிகழ்வில் பங்கேற்றனர்,
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாய் கொண்டாடும் கிறிஸ்துமஸ் என்றாலே கேக்தான் முக்கியமான ஒன்றாகும் பாரம்பரியமான இந்த கலவை திருவிழா குறித்து ஜெம்பார்க் நட்சத்திர ஓட்டல் ஹோட்டலின் இருப்பிட இயக்குநர், சுரேஷ்நாயர் உணவு மேலாளர் பிரதீப்குமார், சிறப்பு செப் சுரேந்திரன் ஆகியோர் கூறும் போது கலவை திருவிழாவான கேக் மிக்ஸிங் என்பது எங்கள் ஓட்டலில் கடந்த இருபது வருடங்களாக நடைபெறும் பாரம்பரிய திருவிழாவாகும் நட்ஸ் , பிளம்ஸ் மற்றும் பிராந்தி ,ரம் ,விஸ்கி , வைன் என்று மிக்ஸ் செய்து ஒரு மாதம் ஊறவைத்து அடுத்த மாதம் கேக் ரெடியாகும் !. இது ஒரு குடும்ப நிகழ்வாக நடத்த படும்என்றார்கள்,
கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது இந்த கேக் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வழங்கப்படும் பலபல பாரம்பரிய விழாக்களை பாரம்பரியம் மாறாமல் கொண்டாடு வதால்தான் அயல்நாட்டினர் உலகம் முழுவதும் இருந்து குவிந்து அவர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் இந்த கலவை திருவிழாவில் இணைந்து கொண்டாடிகின்றனர்,
இந்நிகழ்ச்சியில், அந்த ஓட்டலின் முக்கிய வாடிக்கையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், ஹோட்டலில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் அனைவருக்கும் சாண்டா கிளாஸ் தொப்பி வழங்கப்பட்டது கிறிஸ்மஸ் பண்டிகை வரவேற்கும் விதமாக கேக் கலவை திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்