புனித வெள்ளி(Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.
இந்த புனித வெள்ளியில், இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்ந்து, கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், “இன்று புனித வெள்ளியில், கர்த்தராகிய கிறிஸ்து ஆசீர்வதிக்கப்பட்ட தியாக உணர்வை நினைவு கூர்கிறோம். அவர் வலியையும் துன்பத்தையும் தாங்கினார், ஆனால் சேவை மற்றும் இரக்கத்தின் இலட்சியங்களிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. கர்த்தராகிய கிறிஸ்துவின் எண்ணங்கள் மக்களை ஊக்கப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.