இன்று கார்கில் போர் வெற்றி தினம்..!!

கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்திய வெற்றி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

ஜூலை 26-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக்கு மற்றுமொரு வெற்றிக்கான தினம். இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தால் மூண்ட கார்கில் போரில் வென்ற இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக விரட்டியடித்த நாள் இன்று. 1999-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இந்தியாவின் கார்கில் பகுதிக்குள், பயங்கரவாதிகள் சிலர் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சற்றும் தளராத இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. கார்கிலில் நிகழ்த்தப்பட்ட போர் திட்டத்துக்கு ‘ஆபரேஷன் விஜய்’ என பெயரிடப்பட்டது.

இதனிடையே கார்கில், லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடும் போர் மூண்டது. மைனஸ் டிகிரி குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு போரிட்ட இந்திய ராணுவ வீரர்கள், சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரையும், பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று கார்கில் பகுதியில் வெற்றிக்கொடி நாட்டினர். நாட்டை காக்க நடந்த இந்த போரில் எதிர்பாராத விதமாக ஐநூறுக்கும் அதிகமான இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். கார்கில் போரானது மே மாதம் தொடங்கி ஜூலை 26ஆம் தேதி நிறைவுக்கு வந்த இந்நாள் விஜய் திவஸ் என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவி அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் இந்திய ராணுவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூண்டது. மிகப்பெரிய மலைத் தொடரில் இந்த போர் நடந்தது. சவால்கள் நிறைந்த இந்தப் போரில், பாகிஸ்தானுக்கு இந்தியா பலத்த அடி கொடுத்தது. பாகிஸ்தானின் செயலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட உலகின் முக்கியமான நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் ஊடுருவலை நிறுத்தவில்லை.

இந்திய பகுதியான கார்கில் பகுதியை மீட்க ‘விஜய் நடவடிக்கை’ என்கிற பெயரில் இந்திய ராணுவம் முழுமையாக களமிறக்கப்பட்டது. மைனஸ் டிகிரி குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சவால்கள் நிறைந்த வகையில் இந்தப் போர் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் பலியாயினர். நாட்டை காக்க நடந்த இந்த போரில் இந்திய தரப்பிலும் 543 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்.

கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்படும்.