அரசு விதிகளை மீறும் தனியார் பள்ளிகள்: கடும் சிரமங்களுக்கு இடையே பள்ளிக்கு வந்த தனியார் பள்ளி மாணவர்கள்…

தென்காசி மாவட்டம் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் எதிர்பாமல் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அளித்திருந்தார் மேலும். 20.12.23 புதன்கிழமை மேலும் மழை தொடரும் என்ற காரணத்தினாலும் மாணவ மாணவியர் நலன்கருதி இன்றும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தார். மேலும் மாவட்ட கல்வி துறை சார்பில் அதிகாரிகள் சுற்றரிக்கை வெளியிட்டு அனுப்பினர்.
ஆனால் இந்த உத்தரவிற்கு செவி சாயாமல் ஆலங்குளம் மலைப்பகுதியில் விஷ பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடிவாரத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்று வகுப்பிற்கு மாணவர்களை வரவழைத்து இயங்கிவருகின்றது. இதனால் ஆட்சியர் அறிவித்தும் விதியை மீறி மாணவர்கள் நலன் மீது அக்கறை இன்றி செயல்படும் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்வேண்டுமென்று சமுக ஆர்வலர் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக பள்ளி நிர்வாகம் தரப்பில் மாதந்தோறும் மாவட்ட கல்வித் துறைக்கு பெருந்தொகை அன்பளிப்பு வழங்கபடுகிறது. இதனால் துறை ரீதியாக எங்கள் பள்ளியை ஒன்றும் செய்ய முடியாது என அதிகார தோரனையில் பெற்றோரை மிரட்டுவது கூறப்படுகிறது.