கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, காளியூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் சபரீத் (வயது 34) வியாபாரி. கணுவாய் அஜந்தா நகர் ,டீச்சர்ஸ் காலனியில் உள்ள இவரது குடோனில் வடவள்ளி போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 328 கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வியாபாரி சபரித் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
குடோனில் 328 கிலோ குட்கா பதுக்கிய வியாபாரி கைது..!
