460 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது..!

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று நல்லாம்பாளையம் பாலாஜி நகர் முதல் வீதியில் ரோந்து சுற்றி வந்தார்: அப்போது அங்குள்ளஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலை பொருட்களை (குட்கா ) பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல்  செய்யப்பட்டது .இது தொடர்பாக இதை பதுக்கி வைத்திருந்த ரத்தினபுரி, சுப்பாத்தாள் லேஅவுட்டை சேர்ந்த அப்துல் காதர் ஜெய்லானி (வயது 45) கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.