வால்பாறையில் தொழிற்சங்கங்கள் நாளை நடத்தும் போராட்டத்திற்கு வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைத்து முழு ஆதரவு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சூழல் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 29.03.2025 சனிக்கிழமையன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் இந்நிலையில் ஏற்கனவே வால்பாறை வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகிய இரு சங்கத்தினரும் ஒரு நாள் கடையடைப்பு செய்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் இதைத் தொடர்ந்து வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினர் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி போராட்டத்திற்கு கடையடைப்பு செய்து முழு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர் எனவே நாளை வால்பாறையில்
உள்ள அனைத்து வியாபாரிகளும் முழு கடையடைப்பு செய்வதால் தொழிற்சங்கத்தின ரின் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது