திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி பயன்படுத்தப்படும் தனியார் பள்ளி பேருந்துகள்! விபத்துகளை ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை! விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்று தர வேண்டும்.
திருப்பூர் மாநகரம் பின்னலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாக விளங்குகிறது. இங்கு அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் புற்றீசல் போல ஆங்காங்கே செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் நான்கு வயதில் LKGயில் துவங்கி பனிரெண்டாம் வகுப்பு வரை என பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய கூலி தொழிலாளர்களின் குழந்தைகளும் கூட இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.பள்ளி கட்டணம் மட்டுமின்றி பள்ளியில் இயக்கப்படக்கூடிய பேருந்துகளுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தனியார் பள்ளி பேருந்துகள் காலை 8 மணி முதல் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் இருப்பது கூட ஓட்டுநருக்கு தெரியாமல் சாலையில் செல்லும் வாகனங்களையும் கூட ஒதுக்கி விட்டு செல்லும் அவல நிலைதான் திருப்பூரில் நிகழ்ந்து வருகிறது.இன்று காலை கூலிபாளையம் நான்கு வழிச்சாலை அருகே செயல்படக்கூடிய தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த தனியார் பள்ளி வாகனத்தின் பதிவுகளை ஆராய்ந்த பொழுது அந்த பதிவுகள் எதுவும் சரி செய்யப்படவில்லை என்றும் ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை என்றும் தெரிய வருகிறது இதே போல தான் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படக்கூடிய தனியார் பள்ளிப் பேருந்துகள் உள்ளது. என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அரசின் கீழ் பணியாற்றக்கூடிய அரசு ஊழியர்கள் பொதுவாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தங்களது பாக்கெட்டை நிரப்பாமல் மக்களுக்கான சேவைகளையும் சற்று செய்தால் இதுபோன்ற வாகன விபத்துகளை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் முறையான இழப்பீடும் கிடைக்கும் ஆனால் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ந்து கையூட்டல்களைப் பெற்றுக் கொண்டு தினம்தோறும் ஒரு டார்கெட்டாக இன்று இவ்வளவு நாளை இவ்வளவு என டார்கெட் போட்டு வசூல் செய்யும் நோக்கத்தில் தான் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள் ஆகவே தமிழக அரசு வட்டாரப் போக்குவரத்து துறையை சற்று கவனித்து வாகன விபத்துகளை ஏற்படுத்தி உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணத் தொகையை பெற்றுத் தர வேண்டும் அதேபோல வேகமாக இயக்கப்படும் தனியார் அரசு பேருந்துகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் கோரிக்கையாக வைக்கப்படுகிறது.