ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது விவசாயியான ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான இரண்டு எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் மின்னல் தாக்கி இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுபற்றி தகவலறிந்த கோபி நகராட்சி தலைவர் என்.ஆர் நாகராஜ், வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மின்னல் தாக்கி இறந்த மாடுகளை பார்வையிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply