கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியம் .இவர் நேற்று இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு கூச்சல் போட்டு கைகளைத் தட்டிக் கொண்டு 10 திருநங்கைகள் அத்துமீறி புகுந்தனர். பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியத்திடம் தகராறு செய்தனர் .பின்னர் காவல் நிலையத்தில் உள்ள 3 பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள் .இதை போலீஸ்காரர் பாலசுப்ரமணியம் தடுத்தார்.அப்போது அவரை பிடித்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வினோத்குமார், தப்பி ஓடிய 10 திருநங்கைகள் 3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..திருநங்கைகள் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.