மேட்டுப்பாளையத்தில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார் பேருந்துகளில் ஹாரன்களை அப்புறப்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் .
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் மற்றும் சவுண்ட் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கும் சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், மேட்டுப்பாளையம்வ ட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்திய குமார் மற்றும் அரசு போக்குவரத்து கழக பொறியாளர் எபனேசர் உள்ளிட்ட அதிகாரிகள் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனங்களை இன்று திடீர் ஆய்வு நடத்தினர். அதில் 90 டெசிபல்-க்கு அதிகமாக ஒலி எழுப்பும் ஹார்ன்கள் பொருத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இது சம்பந்தமாக மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறியதாவது தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்படும் என்றும் விதிமுறைகளை மீறி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சி யாக விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதோடு பொதுமக்களும் இது போன்று பேருந்துகள் வாகனங்கள் விதிமுறைகளுக்கு முரணாக சாலைகளில் செல்வதாக இருந்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டார்