இனி 24 மணி நேரமும் சிகிச்சை… பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு.!!

மிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நாய்கடி சம்பவங்கள் என்பது அதிகரித்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் நாய் மற்றும் பாம்பு கடிக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் 24 மணி நேரமும் நாய்க்கடி மற்றும் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பாம்பு கடிக்கு ஆளான நபர்களுக்கு உடனடி மருத்துவ உதவி செய்யவும் மருந்துகள் மற்றும் ஊசிகள் இருப்பில் உள்ளதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.