கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவத்தில் இருந்த மரங்களில் வெட்டி கடத்தப்படுவதாக தங்களுக்கு மறுவாழ்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் அந்த அமைப்பு தலைவர் சையது என்பவர் நேரல் சென்று பார்த்தார். அங்கு சிலர் மரங்களை வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்களிடம் சென்று விசாரித்த போது அவர்கள் இது குறித்து சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் இது குறித்து சங்கனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் விசாரித்த போது முறையான அனுமதி பெறாமல் மரத்தை வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் கூறினார். முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.