காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களுக்கு வால்பாறையில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது .

கோவை மாவட்டம் வால்பாறையில் நகர இந்து முன்னணி சார்பாக நேற்று ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களுக்கு புஷ்பாஞ்சலியுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல, மாவட்ட, நகர நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.