திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது – சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு பேச்சு..!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் நேரு பதிலளிக்கையில் திருச்சியில் ரூ.220 கோடி மதிப்பீட்டில் புதிய மார்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என தனித்தனியே மார்கெட் அமையும். அதனால் திருச்சி காந்தி மார்க்கெட் எவ்விதத்திலும் மாற்றுவதற்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை காந்தி மார்கெட்டை சீர் செய்து, பெரிதுபடுத்துவதற்காக ரூ.50 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார் விரைவில் காந்தி மார்க்கெட் சீர் செய்யப்பட்டு தொடர்ந்து வியாபாரம் நடத்தப்படும் என்று சட்டமன்ற கூட்டத் தொடரில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு உறுதியளித்தார்..