திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.09.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தது பொதுமக்கள் மத்தியிலும் மருத்துவர்கள் செவிலியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..