கோவை உப்பிலிப்பாளையம் வரதராஜபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). எலக்ட்ரீசியன்.
சம்பவத்தன்று அவர் தனது உறவினர் குமார் என்பவருடன் செல்வபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர்கள் சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோவில் அருகே வந்தபோது வாலிபர் ஒருவர் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் திடீரென அந்த வாலிபர் குமாரிடம் வாக்குவாதத்தில் செய்து தகராறில் ஈடுப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அந்த வாலிபதை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜேஷின் கழுத்தில் வெட்ட முயற்சி செய்தார்.
உடனே ராஜேஷ் அந்த வாலிபரிடம் இருந்து தப்பி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து ராஜேஷ் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சொக்கம்புதூர் ஜீவாபதியை சேர்ந்த வினோத்குமார் (23) என்பவர் ராஜேசை அரிவாளில் வெட்ட முயற்சி செய்தது தெரிவந்தது. மேலும் அவர் மீது செல்வபுரம், ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வினோத்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.