கணவரின் கள்ளகாதலி மீது மிளகாய் பொடி தூவி, தலைமுடியை அறுத்து கொல்ல முயற்சி- மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை பக்கம் உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி ( வயது 38)இவர் மாச்சம்பாளையத்தைச் சேர்ந்த சிவா என்ற  சிவநாதனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம் .இதை அறிந்த சிவநாதனின் மனைவி மல்லிகா தனது மகன் விக்னேஷ் மகள் வினிதா ஆகியோருடன் வெள்ளலூரில் உள்ள சுமதி வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தனர் . அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி, தாக்கினார்கள். பின்னர் கத்தியால் சுமதி தலைமுடியை வெட்டினார்கள் . இதை தடுத்த சுமதியின் மகன் கணேஷ் தாக்கப்பட்டார். பின்னர் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சுமதியும் அவரது மகன் கணேசும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சிவநாதன் மனைவி மல்லிகா மகன் விக்னேஷ், மகள் வினிதா ஆகியோர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..