பைக் மீது லாரி மோதி வாலிபர் பரிதாப பலி..

கோவை தெற்கு உக்கடம் ஜி .எம் .நகர். முதல் வீதியைச் சேர்ந்தவர் ஜான் பாட்சா . இவரது மகன் இஸ்ரத் அலி (வயது 34) இவர் நேற்று ப்ரூக்பீல்டு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை. தேவாங்கர்பேட்டை சந்திப்பு அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடைந்த இஸ்ரத் அலி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து பீளமேடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள் .இது தொடர்பாக கேரள மாநிலம் பாலக்காடு கொடுவாயை சேர்ந்த லாரி டிரைவர் விஷால் (வயது 29) கைது செய்யப்பட்டார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.