ஐரோப்பாவிலிருந்து வரும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வரும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடியாகவே டிரம்ப் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் 50% வரி விதிக்கப்போவதாக அறிவித்திருந்தது.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதைப் பற்றி கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் மதுபானங்கள் உட்பட அனைத்துக்கும் 200% வரி விதிக்கப்படும். கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பப் பெறாவிட்டால், ஷாம்பெயின், ஒயின் போன்ற மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். இது அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஷாம்பெயின் தொழிலுக்கு நல்லது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கனடா 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. கனடிய ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்கா வரி விதித்ததை அடுத்து, கனடா 29.8 பில்லியன் கனேடிய டாலர் (20.7 பில்லியன் டாலர்) மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் இந்த வரி கம்ப்யூட்டர்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களையும் பாதிக்கும் என்று நிதி அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் கனடிய அலுமினியம் மற்றும் ஸ்டீலுக்கு 25% வரி விதித்ததற்குப் பதிலடியாகவே கனடாவின் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றது மற்றும் முட்டாள்தனமானது என்றும் லெப்ளாங்க் கூறியுள்ளார். கனடா, மெக்சிகோ நாடுகள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரி அமலுக்கு வந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நாடுகளில் இருந்து 25% வரி வசூலிக்கப்படும் என்று கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்திருந்தது.
பின்னர், ஒரு மாதத்துக்கு இந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்திருந்தார். நிறுத்தி வைக்கும் காலம் முடிந்த நிலையில், இனி சலுகை இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். இதோடு, சீனாவுக்கு எதிராக 10% கூடுதல் வரியும் இன்று முதல் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் அறிவிப்பை அடுத்து அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.