52 கிலோ குட்காவுடன் தூத்துக்குடி வாலிபர் கைது.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குரும்பபாளையம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணை அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவசிமுத்து மகன் காமராஜ் (வயது 27 )என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 54 கிலோ குட்கா, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.