மயிலாப்பூர் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியதாக வந்த புகாரைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியான வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதன் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசாரணை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னைக்கு காவல்துறையினர் காவல்துறை வாகனத்தில் சென்னை அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட தேவநாதன் இந்திய கட்சி கல்வி முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணியாக இணைந்து போட்டியிட்டு தோல்வியை கண்டவர். வின் தொலைக்காட்சி நிறுவனர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது..